விமான பெட்ரோலுடன் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து


காஞ்சிபுரம் அருகே விமானத்துக்கான பெட்ரோல் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு 20,000 லிட்டர் விமான எரிபொருளான வெள்ளைப் பெட்ரோல் டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.‌

லாரி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடல் பகுதியில், சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மூன்று கிரேன்களின் உதவியோடு லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரியை அது கவிழ்ந்துள்ள சாலையோர பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதால், அதில் இருக்கும் பெட்ரோலை வேறு வாகனத்திற்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS