மேட்டூர் அணையில் குறையும் நீர் : வெளியே தெரியும் நந்தி சிலை


மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், காவிரி நீர்தேக்க பகுதியான பன்னவாடியில் தண்ணீரில் மறைந்திருந்த நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

பாசனத்திற்காக அணையிலிருந்து, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், தண்ணீரில் மறைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை தெரி‌கிறது. விடுமுறை நாள் என்பதால், சிலையை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். பன்னவாடி பரிசல் துறைக்கு வரும் அவர்கள் அங்குள்ள பரிசல்கள் மூலமாக சென்று வெளியே தெரியும் புராதன சின்னங்களை பார்த்து செல்கிறார்கள்.

POST COMMENTS VIEW COMMENTS