தங்கத்துக்கு பதிலாக இரும்புத் துண்டு தந்து கோடிக்கணக்கில் மோசடி


தங்கம் விற்பதாக‌க் கூறி நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த நகை வியாபாரி ரகுராமிடம், உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் தன்னிடம் 5 கிலோ தங்கம் விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதை வாங்க விருப்பம் தெரிவித்த ரகுராம், ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் ‌சென்றிருக்கிறார்.

யானைக் கவுனி பகுதியில் இருந்த சம்பத் குமாரிடம் ரகுராம் ஒன்றரைக் கோடி ரூபாய் தந்துள்ளார். சம்பத் குமார் தந்த பார்சலை பிரித்து பார்த்த ரகுராம் அதற்குள் இரும்புத் துண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரகுராம், போலீசாரிடம் புகார் அளித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS