பெண்களை சாட்டையால் அடித்த பூசா‌ரிகள்..... நூதனமுறையில் நேர்த்திக் கடன் !


நாமக்கல் அடுத்த பவித்திரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்தும், பெண்களை சாட்டையில் அடிக்கும் நூதன முறையில் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அருகேவுள்ள வெள்ளாளப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ அச்சப்பன் கோவில் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருவிழாவுக்காக விரதம் இருந்த ஆண்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.

பின்னர் பெண்கள் வரிசையாக மண்டியிட்டு கையை மேல் நோக்கி தூக்கி இருக்க கோவில் பூசாரி ஒவ்வொருவராக சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டினார். சாட்டையில் அடிவாங்கிய பெண்கள் திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பூசாரியிடம் அடிவாங்கியதாகவும், பெண்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS