சாத்தூரில் அரசுப் பேருந்தில் ஒருவர் சுட்டுக்கொலை


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசுப் பேருந்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து சாத்தூரில் வந்த போது கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமியை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தப்பி ஓடிய இருவரை, சாத்தூர் போலீசார் விரைந்து ஓடிச் சென்று பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் போலீசார் அந்த இருவரை இன்னும் பிடிக்கவில்லை. எதற்காக அவர்கள் கருப்பசாமியை சுட்டுக்கொன்றனர் என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவரவில்லை.

POST COMMENTS VIEW COMMENTS