மா மரத்தை விட்டு இறங்க மறுக்கும் கரடி.... அச்சத்தில் பொதுமக்கள்!


மணிமுத்தாறு அணைப்பகுதியிலுள்ள மீன்பண்ணை அருகே சுற்றித் திரியும் கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மீன்பண்ணை அருகே நேற்றிரவு கரடியை விவசாயிகள் ஒருசிலர் பார்த்துள்ளனர். இதனையடுத்து கரடியை விரட்ட கிராமத்தினரும், காவல் துறையினரும் வனத்துறையினரின் உதவியை நாடினர். வனத்துறையினர் கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மரத்தில் ஏறிக்கொண்ட கரடி ஒவ்வொரு மரமாக தாவிச் செல்வதால், வனப்பகுதிக்குள் விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தொடர்ந்து ஊருக்குள் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விளைநிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS