கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்


வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டுப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம். ரஷ்யா, ஆர்ட்டிக் பகுதியிலிருந்து உள்ளான் இன பறவைகளும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கடல் ஆலாக்கள், கடல் காகம் போன்ற பறவைகளும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வருகின்றன.

சரணாலயத்துக்கு பெருமை சேர்க்கும் பிளமிங்கோ எனப்படும் பூனாரை பறவைகளும் வந்துள்ளன. கோடியக்காடு, கோவைத்தீவு, இரட்டைத்தீவு, சிறுதலைக்காடு போன்ற இடங்களில் உள்ள பறவைகள் இங்கு வந்துள்ளன. கண்களுக்கு விருந்தளிக்கும் வெளிநாட்டுப் பறவைகளைக் காணவும், ஆராய்ச்சிக்காகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS