4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர்: மதுரை மாநகராட்சி அறிவிப்பு


மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 4 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை இந்தாண்டு வழக்கம் போல பெய்யவில்லை. இதனால் வைகை அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகரட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் முதல் இந்த புதியமுறை நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னதாக 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடி தண்ணீர் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் சிறிது வேதனை தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS