மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக மேட்டூர் அணையை வந்தடைவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது‌.

கர்நாடகா அணைகளில் இருந்து அக்டோபர், 7-ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரை தினமும், 2,000 கனஅடி நீர் தமிழகத்துக்கு விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியாற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 6,87‌3 கனஅடியாக நீர் வந்தது.

இன்று காலை நிலவரப் படி 9,083 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கின்றது. அணையின் நீர்மட்டம் 69.39 அடியாகவும், அணையின் ‌நீர்இருப்பு 32.18 டிஎம்சியாகவும் உள்ளது.

பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நாளை விட இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS