பாபநாசம் அருகே தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு: விடுமுறையை கொண்டாடியபோது விபரீதம்


பாபநாசம் தலையணை பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் 3 உடல்களை தீயணைப்புத் துறையினர் இன்று மீட்டனர். இதனையடுத்து நீரில் மூழ்கி மொத்தமாக 4 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணை பகுதியில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் மிதந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, மிதந்த உடலை மீட்டனர். மேலும் வேறு யாரும் நீரில் மூழ்கியிருக்கிறார்களா என அப்பகுதியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து எனத் தேடி வந்தனர்.

அதைதொடர்ந்து இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் வசந்தராஜன், சதீஷ்குமார், சீனிவாசன், நக்கீரன் ஆகிய 4 பேர் என தெரியவந்துள்ளது. இவர்கள் சென்னையில் பணியாற்றி வந்துள்ளனர். 5 நாட்கள் விடுமுறை என்பதால், கன்னியாகுமரி, பாபநாசம் பகுதிகளுக்கு நண்பர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று மதியம் தலையணை பகுதியில் அவர்கள் குளித்துள்ளனர். அப்போது நண்பர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய போது, அவரைக் காப்பற்ற முயன்றதில் மற்ற மூவரும் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS