குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

துத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் நேற்று நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்காக மக்கள் வந்திருந்தனர்.

மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காளி, கரடி, குரங்கு உள்ளிட்ட வேடங்களை அணிந்த பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதனைக் காண்பதற்கு லட்சக்கணக்கானோர் கடற்கரையில் கூடியிருந்தனர். சூரசம்ஹாரத்தையொட்டி, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS