முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி 5,000 பேர் பால்குடம்


முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி, கோவையில் அமைச்சர்கள், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர். கோவையில் அமைச்சர்கள், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. சுகுனாபுரத்தில் 364 மூலிகைகளைக் கொண்டு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. இதையடுத்து குனியமுத்தூர் மாரியம்மன் கோவிலில் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்த அவர்கள் சுகுனாபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

POST COMMENTS VIEW COMMENTS