காவிரி விவகாரம்: மத்திய தொழில்நுட்பக் குழுவினருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை


காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்ட தொழில்நுட்பக்குழுவினரை தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக, கர்நாடகாவில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கர்நாடகாவில் தங்களது ஆய்வினை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மேட்டூர், பவானிசாகர் அணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், தஞ்சையை தொடந்து, திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் காவிரி ‌உயர்மட்ட குழுவினர் ஆய்வு நடத்தி‌னர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள், பிரச்னைகளை அவர்கள் கேட்டறிந்‌தனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை வந்துள்ள ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழு அதிகாரிகளை தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கான நீர்த் தேவை குறித்து தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் மத்தியக் குழுவினருடம் எடுத்துரைத்திருப்பார் எனத் தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS