முதலமைச்சர் நலம் பெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் நடிகர் விவேக் வழிபாடு


தமிழக முதல்வர் விரைவில் நலம்பெற வேண்டி திரைப்பட நடிகர் விவேக் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது 27 வகையான சிறப்பு பூஜை பொருட்களை கொண்டு காமாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு நவஆவர்ண பூஜையில் பங்கேற்று வேண்டுதல் செய்தார்.

பின்னர் பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் வேண்டுதல்கள் செய்து வருவதாக தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS