கோவை மாணவிகளின் புதுமை முயற்சி: பல்வேறு நாட்டு பொம்மைகளுடன் கொலுக் கண்காட்சி


கோவை அவிநாசிலிங்கம் பல்கலைகழக மாணவிகள் நடத்திய கொலுக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொம்மைகள் இடம்பெற்றிருந்தன.

புராண காலத்தில் நடந்த ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நிகழ்வுகளை கொலுவில் வைப்பது வழக்கம். ஆனால் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகள் வித்தியாசமான முறையில் உலக நாடுகளைச் சேர்ந்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். சீனா, சிங்கப்பூர், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற‌ 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொம்மைகள் தங்கள் நாட்டு கலாச்சார உடைகளை அணிந்திருந்தன.

இதேப்போல் இந்திய கலாச்சார‌த்தைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பொம்மைகளும் இடம்பெற்றிருந்தன. புதுமைகள் நிறைந்துள்ள இந்த கொலு பொம்மை கண்காட்சியை ஏராளமான மாணவிகள் கண்டு ரசித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS