பண்டிகை நாட்களை முன்னிட்டு தங்கம், வெள்ளி விலை உயர்வு


அடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் முதலீட்டுத் தங்கம் 12 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 38 ரூபாயாக இருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 12 ரூபாய் விலை அதிகரித்து 2 ஆயிரத்து 841 ரூபாயாகவும், ஒரு சவரன்‌ 96 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 22 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 90 காசு விலை உயர்ந்து 45 ரூபாய் 60 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 800 ரூபாய் விலை அதிகரித்து 42 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

POST COMMENTS VIEW COMMENTS