திருவாரூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜை.... நெல்லில் எழுத பழகும் குழந்தைகள்


திருவாரூர் அருகே கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை வைத்து வழிபாடு நடத்தினர்.

கல்விக் கடவுள் சரஸ்வதிக்கென்று இந்‌தியாவில் தனியாக உள்ள ஒரே கோயிலான கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.

ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்ற தலம் இது. பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படி செய்வதால் கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே அதிகாலை முதலே பெற்றோர் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று வருகின்றனர். நெல், அரிசி ஆகியவற்றில் குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுக்கும் வித்யாரம்ப நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS