தமிழர்களையும் ஈர்க்கும் வங்காள மக்களின் நவராத்திரி பண்டிகை!


வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் தனிச்சிறப்புக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது நவராத்திரி பண்டிகை. இதை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மேற்கு வங்காள மக்கள் தங்கள் கலாசார அடையாளங்கள் மாறாமல் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

நவராத்திரியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் 9 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும், து‌ர்கா வழிபாடு, சென்னை பெங்கால் சங்கத்தின் சார்பில் இங்கும் பிரதிபலிக்கிறது. தமிழர்களைப் போலவே தொன்மையான கலாசாரத்தைக் கொண்டுள்ள மேற்கு வங்க மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தையும், நிறைவையும் த‌ருகிறது இந்த நவராத்திரி. இப் பண்டிகையை அவர்கள் வங்காளத்தில் துர்கா பூஜோ என்கின்றனர்.

இதேபோல, மும்பையில் ராமகிருஷ்ணா மிஷன் சார்பாக 9வது நாள் துர்கா பூஜைக்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது தனது மனைவி ஜெயா பாதுரி, மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆரத்யா ஆகியோருடன் கலந்து கொண்டார்.

POST COMMENTS VIEW COMMENTS