விழுப்புரம் பட்டாசு ஆலைக் கிடங்‌கில் வெடி‌ விபத்து: ஆலை உரிமையாளர் ரமேஷ் கைது


விழுப்புரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், துருவை கிராமத்தில் பட்டாசு ஆலை கிடங்கில் நேற்று மாலை வெடி விபத்து நிகழ்ந்தது. இதில், அந்தக் கிடங்கு முழுவதும் தரைமட்டமானது.விபத்து நடந்தவுடன் ஆலை உரிமையாளர் ரமேஷ் தலைமறைவானார்.தற்போது அவரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் விழுப்புரம் அருகிலுள்ள ராவுத்தன் குப்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

முன்னதாக இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றி கொண்டிருந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு படையினர் தீயை அணைத்தனர். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். வெடி விபத்து நடைபெற்ற இடத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வீ.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS