பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருவை பகுதில் உள்ள பட்டாசு ஆலை கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக உள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS