கடலூரில் பழங்கால கார்களின் கண்கவர் அணிவகுப்பு


நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், அதற்கு பின்பும் பயன்பாட்டில் இருந்த பழங்கால கார்களின் அணிவகுப்பு கடலூரில் நடைபெற்றது.

கடலூரில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தயாரிப்பான பழம்பெருமை போற்றும் கார்கள் தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் அணிவகுத்து சென்றன. பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் அணிவகுத்த கார்களை பொதுமக்களும் கார் பிரியர்கள் கண்டுகளித்தனர்.

சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

POST COMMENTS VIEW COMMENTS