திருத்தணியில் அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம் வெட்டிக்கொலை


திருத்தணியில் அதிமுக நகர்மன்ற கவுன்சிலர் ஆறுமுகம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அதிமுக நகர்மன்ற கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருத்தணி பேருந்து நிலைய பகுதியில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருத்தணி நகர்மன்ற கவுன்சிலராகவும், திட்டக்குழு உறுப்பினராகவும், ஆறுமுகம் என்கிற ஆப்பிள் ஆறுமுகம் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை, இந்திரா நகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆறுமுகத்தை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கண்களில் மிளகாய் பொடி தூவி, சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருத்தணி பேருந்துநிலையத்தில் அனைத்துபேருந்துகளும் நிறுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆறுமுகம் மீது பல்வேறு குற்ற வழக்கள் உள்ளன.எனவே இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் 30 -ம் தேதி திருத்தணி பேருந்து நிலையம் அருகில் ஒரு கும்பல் ஆறுமுகத்தை கொலை செய்ய முயன்றுள்ளனர். எனவே இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது தேர்தல் தொடர்பாக நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS