வீட்டுக்கடன் முறைகேடு..ரெப்கோ வங்கி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை


வீட்டுக்கடன் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சென்னையில் ரெப்கோ வங்கி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநர் வரதராஜன் மற்றும் வீட்டுக் கடன் செயல் இயக்குநர் ரகு உள்ளிட்ட நால்வர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரெப்கோ வங்கியின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க புதிய தலைமுறை முற்பட்டது. ஆனால், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

முன்னதாக, 42 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ரெப்கோ வங்கி அதிகாரிகள் மீது புகார்கள் வந்ததை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால், சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS