சென்னை கத்திப்பாரா பாலத்தில் லாரி மோதி 20 வயது இளைஞர் உயிரிழப்பு


சென்னை கிண்டியில், லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார்.

கிண்டி கத்திப்பாரா பாலத்தில் வந்து கொண்டிருந்த மாநகராட்சி குப்பை லாரியை இருசக்கர வாகனத்தில் வந்த 20 வயது இளைஞர் கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்‌கத்தில் மோதி, அவர் கீழே விழுந்தபோது, லாரியின் பின்சக்கரம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் வைத்து போலீசார் விசாரித்ததில், உயிரிழந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த முருகேசன் என்று தெரியவந்தது. விபத்து காரணமாக கத்திப்பாரா பாலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஹெல்மேட் வைத்திருந்தாலும், அதை அணியாமல் பயணித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS