நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சிண்டிகேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலையில் சிண்டிகேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்படுகிறது. அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் இன்று அதிகாலை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற உதவி ஆய்வாளர் இது குறித்து தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஏடிஎம் மையத்தில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS