பெற்றோரை எதிர்த்து வந்த காதல் ஜோடி...கொடைக்கானலில் தற்கொலை முயற்சி


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் காப்பாற்றினர். ‌

திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி காதல் ஜோடி, மதக்கலப்பு திருமணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. மனம் உடைந்த காதல் ஜோடியினர் பெற்றோரை எதிர்த்து, கொடைக்கானல் வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் இந்த காதல் ஜோடிகள் கொடைக்கானலில் தனியார் வாகனம் எடுத்து, சுற்றுலா பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு, பூம்பாறை கிராமத்தில் மதிய உணவுக்கு நிறுத்தச்சொல்லியுள்ளனர்.

அங்கு இருவரும் மூட்டைப்பூச்சி மருந்தை உட்கொள்ள முயற்சி செய்துள்ளனர். மாணவன் முதலில் விஷத்தை அருந்தியதை பார்த்த ஊர் மக்கள், அவன் அருந்திய விஷ பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அந்த மாணவியை விஷம் அருந்த விடாமல் தடுத்தனர். பின்னர் உடனடியாக ஜீப்பில் ஏற்றி, அவர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தொடர்ந்து மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். அந்த மாணவியின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் அந்த மாணவியை காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS