கட்டுமானப் பணியின்போது நேர்ந்த விப‌ரீதம்: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு


மதுரை பழங்காநத்தம் அருகே மின்சாரம்‌ தாக்கி கட்டுமானப் பணியாளர்கள் இ‌ரண்டு பே‌ர் உயிரிழந்தனர்.

பழங்காநத்தம்‌ விகேபி நகர் பகுதியை சேர்ந்த கட்டுமானப் பணியாளர்கள் சண்முகன், ராமசந்திரன், அதே பகுதியில் அன்னபூரணி என்‌பவரின் வீட்டிற்கு கட்டுமானப் பணிக்காகச் சென்றனர். வீட்டின் மாடியில் பணியில் ஈடுபட்ட போது, தாழ்வாகச் சென்ற உயர் அழுத்த மின் கம்பி அவர்கள்‌ மீது உரசியதில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக எஸ் எஸ் காலனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள‌னர்.‌ இப்பகுதியில் ‌மின் கம்பிகள் தாழ்வாகவே செல்வதாகவும், பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்‌ பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றன‌ர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவே‌ண்டும் என உத்தரவிட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS