ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்


இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

ராமேஸ்வரம் மீனவரின் படகு இலங்கை கடற்படையினரின் ரோந்து படையினரால் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மீனவ சங்கங்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இதில், மத்திய, மாநில அரசு‌ளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மீனவர்கள் யாரும் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக, படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தால் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS