காவிரி விவகாரம்: தஞ்சையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட ஏராளமான திமுக-வினர் பங்கேற்றுள்ளனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அப்பகுதியிலுள்ள ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

காவிரி நீர் தொடர்பான வழக்கு கடந்த 30-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அக். 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அக்டோபர் 3-ஆம் தேதி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மறுப்பு தெரிவித்து விட்டது.

POST COMMENTS VIEW COMMENTS