மனித கழிவுகளை இரு கைகளால் அள்ளும் அவல நிலை: துப்புரவு பணியாளர்களின் வேதனை


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கைகளால் மலம் அள்ள தாங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கு தேவையான காலணிகள், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அதே சமயம் இவைகளை வாங்கியுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் இளவரசனையும் சுகாதார ஆய்வாளர் வீரபாகுவையும் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

இதனிடையே, தவறிழைக்கும் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS