காய்ச்சலுக்கு சேர்க்கப்பட்ட பெண்ணின் உடல் கருகியது போல் ஆன கொடூரம்: உறவினர்கள் போராட்டம்


குன்னுாரில் தவறான சிகிச்சையால் இளம் பெண்ணின் உடல் முழுவதும் கருகியது போல் ஆனதாக கூறி உறவினர்கள் ம‌ருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் குயின் ஹில் பகுதியை சேர்ந்தவர் கவிதா. காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது போல் கருமையாக மாறிவிட்டது. இதனால் கவிதாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கவிதாவின் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பணம் கோரினர். ஆனால் அவர்கள் கோரிய கோரிய பணத்தை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் ஜான் மனோகரன் விரைந்து வந்து இரு தரப்புக்கும் சமாதானம் செய்து வைத்தார்.

POST COMMENTS VIEW COMMENTS