காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: டிராக்டரை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு கண்டனம்


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து விவசாயிகள் வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்யப்போவதாக அறிவித்ததால் முத்துராமலிங்கம் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வங்கிகள் விவசாய கடன்களை வசூலிக்க குண்டர்களை பயன்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS