எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கு: சிபிசிஐடிக்கு நோட்டீஸ்


எஸ்விஎஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கல்லூரித் தாளாளர் வாசுகி தொடர்ந்த வழக்கில், 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கல்லூரியின் எதிரே இருந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

மாணவிகள் உயிரிழப்பு தொடர்பாக சின்ன சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி தாளாளர் வாசுகியின் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

POST COMMENTS VIEW COMMENTS