உயிருக்கு பாதுகாப்பளிக்க கோரி காதலர்கள் மறியல் போராட்டம்


உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி தேனி மாவட்டம் தாத்தப்பன்குளத்தில் காதலர்கள் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த ஒரே மதத்தை சேர்ந்த ஆயிசா இர்பான் என்ற இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரத்தில் இரு வீட்டாரும் எதிர்ப்பு இருந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பெண் வீட்டார் அடிக்கடி  கொலை மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இரண்டு முறை கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே இதுவரை தாங்களுக்கு எந்த வித பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நேற்றிரவு தங்கள் வீட்டின் முன்பு பெண் வீட்டார்கள் வந்து தகராறு செய்ததாகவும் கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறி கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த ஆயிசா- இர்பான் ஜோடி காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்த போலீசார் இருவரையும் குன்டுகட்டாக தூக்கி காவல்நிலையத்தில் வைத்த விசாரணை செய்து வழக்கு பதிவும் செய்தனர். காவல் நிலையத்தில் ஏற்பட்ட காதல் ஜோடி செய்த சாலை மறியலால் சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS