ரூ.1.18 கோடி வங்கி பணம் கொள்ளை வழக்கு: ஓட்டுனர் நீதிமன்றத்தில் சரண்


சென்னையில் ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட போது ரூ.1.18 கோடி வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த வாகன ஓட்டுனர் இசக்கிமுத்து நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கடந்த 3-ஆம் தேதி சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்புவதற்காக பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான 1.18 கோடி ரூபாய் பணம் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. வாகனத்தில் பாதுகாவலர் ஜோயல் மற்றும் ஓட்டுனர் இசக்கிமுத்து இருவரும் சென்றுகொண்டிருந்தனர்.

புலியம்பட்டி என்னும் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடிக்க சென்றனர். அப்போது பாதுகாவலர் ஜோயலின் கவனத்தை திசை திருப்பிவிட்டு டிரைவர் இசக்கிமுத்து பணத்துடன் வாகனத்தை கொள்ளையடித்து சென்றார்.

போலீசார் விசாரணையில் டிரைவர் இசக்கிமுத்து சொந்த ஊர் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று அவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS