டிராக்டரை பறிமுதல் செய்யவுள்ளதாக வங்கி அறிவிப்பு: அதிருப்தியில் விவசாயி தற்கொலை முயற்சி


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டிராக்டரை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

கடன் நிலுவை தொகையை திருப்பி செலுத்தாததால் ஏற்கனவே 2 விவசாயிகளின் டிராக்டர்களை சம்பந்தப்பட்ட வங்கி பறிமுதல் செய்துள்ளது. அதனை கண்டித்து, இன்று விவசாயிகள் வங்கியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டன‌ர். அப்போது, விவசாயிகளுக்கும் வங்கி ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து முத்துராமலிங்கம் என்பவரது டிராக்டரையும் பறிமுதல் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த முத்துராமலிங்கம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS