திருவண்ணாமலையில் 50 கிலோ வெள்ளி, 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை


திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த தேவிகாபுரம் பகுதியில், நகைக்கடை காவலாளியை கட்டிப்போட்டு 50 கிலோ வெள்ளி, 25‌ சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பிரேம் கிஷோர் என்பவருக்கு சொந்தமான நகை விற்பனை மற்றும் அடகு கடையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. 10 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு நகைக் கடைக்கு அருகே உள்ள கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு அங்கிருந்து நகை கடையின் சுவற்றையும் துளையிட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு கடையின் காவலாளி ஏழுமலை விழித்துக் கொண்டதும், கொள்ளையர்கள் ஏழுமலையை கட்டிபோட்டனர். பிறகு, கடைக்குள் புகுந்தவர்கள் 50 கிலோ வெள்ளி நகைகள்‌, 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் சேத்பட் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

POST COMMENTS VIEW COMMENTS