கோவை சசிகுமார் படுகொலை வழக்கு:சந்தேகத்திற்குரிய மூவரின் புகைப்படங்கள் வெளியீடு


கோவையில், இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், மூன்று பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை சம்பவம் நடைபெற்ற போது, அங்கிருந்த கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு இந்த புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் 94981-04441 என்ற தொலைபேசி மூலமாகவோ, sidcbcidcbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் தேதி இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்துத்துவா அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS