சென்னை ரயில்நிலைய வங்கி ஏடிஎம்-மில் கள்ள நோட்டு: போலீசார் விசாரணை


சென்னையில் வங்கி ஏடிஎம் ஒன்றில் ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகள் வந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தை சேர்ந்த தமிழரசு என்ற வங்கி ஊழியர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் பேங் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம்மில் 14 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த நிலையில் அதனை சோதித்த தமிழரசுக்கு அது கள்ள நோட்டுகளாக இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து பெரியமேடு காவல்நிலையத்தில் அந்த நோட்டுகளை அவர் ஒப்படைத்தார். போலீசார் சந்தேகத்திற்குரிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS