வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ.10 லட்சத்துக்கு ஏலம்


வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சோளிங்கர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டு எசையனுர் மற்றும் அருந்ததிபாளையம் கிராமங்களை உள்‌ளடக்கியது. இதில் எசையனுர் கிராமத்தில் 350 மற்றும் அருந்ததிபாளையத்தில் 130 வாக்குகள் உள்ளன. இந்த நிலையில் எசையனுர் கிராமத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு 8 மணி அளவில் வார்டு உறுப்பினர் பதவி ஏலம் விடப்பட்டதாகவும், அதில் விநாயகம் என்பவர் 10 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு வார்டு உறுப்பினர் பதவியை‌ ஏலம் எடுத்ததாகவும் அருந்ததிபாளைய மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்திலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS