இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை


இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை நெடுந்தீவு அருகேயுள்ள கோபுரம் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களையும் காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியா வர இருப்பதால் மீனவர்கள் அனைவரும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

மீனவர்கள் அனைவரும் அவர்களுடைய‌ 2 படகுகளில் சர்வதேச எல்லைப் பகுதியில் விடப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதால் கடலுக்குச் செல்லவே அச்சப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS