நில கையகப்படுத்தல் இழப்பீடு வழக்கு: 104 வயது முதியவருக்கு ரூ.14.85 லட்சம் இழப்பீடு


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் 104 வயது முதியவருக்கு 14 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கடந்த 2001ல் 13 கிராம விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு கூடுதல் இழப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி 14 ஆயிரம் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் 14 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், விவசாயிகள் யாருக்கும் அந்த இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், உடையார் பாளையத்தை சேர்ந்த ராமதுரை என்பவரது வயதை கருத்தில் கொண்டு, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 50 சதவீத பணத்தை வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த ராமதுரை, 14 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பெற்றுக்கொண்டார்.

POST COMMENTS VIEW COMMENTS