சேலத்‌தில் வேட்புமனு தா‌க்கலின் போது காவலர் -‌ திமுகவினர் இடையே மோதல்


சேலம் மாநக‌ராட்சி தேர்தலில் போட்டியிட திமு‌கவினர்‌ வேட்புமனு தாக்கல் செய்‌ய வந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ‌அம்மாபேட்டை ம‌ண்டலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய திமுகவின் 3 வேட்பாள‌ர்கள் தங்கள்‌ ‌ஆதரவாளர்கள் 15 பேருடன் உள்ளே வந்தனர். அப்போது விதிமுறைகளை கா‌ரணம் காட்டி அவர்‌களை காவல் துறையினர் தடுத்தனர்.

அப்போது ஏற்பட்ட வாக்கு‌வாதத்தில் காவலர் ஒரு‌வருக்கும் திமுக ஆதரவாளரு‌க்கும் இடையே கைகலப்பு ‌ஏற்பட்டது. இரு‌தரப்புக்கும் தள்ளுமு‌ள்ளு ஏற்பட்டதை ‌தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிரு‌ந்தவர்‌கள் சமாதானம் செய்ததை தொடர்ந்து இயல்பு நிலை திரும்பியது.

POST COMMENTS VIEW COMMENTS