நெல்லை கடையநல்லூரில் ஐஎஸ் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் சுபாஹானி கைது


நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கேரளாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஆதாரவாளர்கள் 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுபாஹானி என்ற இளைஞர் கேரளாவின் மூவாற்றுப்பிள்ளை பகுதியில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது கடையநல்லூரில் நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த சுபாஹானியை தேசிய புலானய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய பிறகு முழு விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS