சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே லாரி கூவத்தில் கவிழ்ந்தது : ஒருவர் உயிரிழப்பு


சென்னை பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே கூவத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

சென்னை பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே ஆந்திர பதிவெண் கொண்ட லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி நிலைதடுமாறி கூவத்தில் கவிழ்ந்தது. இதனை நேரில் பார்த்தவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், மீட்டு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒருவரது உடல் கூவத்தில் இருந்து மீட்கப்பட்டது. லாரியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS