தூத்துக்குடி அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு


தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஜெகவீரபாண்டியபுரத்தில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 12 பேர், காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். ஜெகவீரபாண்டியபுரம் அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், ‌ ‌4 வழிச் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS