மீனாட்சிபுரத்தில் ராம்குமாரின் உடல் இன்று அடக்கம்


சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ராம்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

உடல் அடக்கம் நடைபெறவுள்ளதால் மீனாட்சிபுரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதால் ஊரே மயான அமைதியுடன் காணப்படுகிறது.

ராம்குமார் மரணமடைந்து 13 நாட்களாக்கு பின் அவரது உடல் பல போரட்டதிற்கு பின் நேற்று தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ராம்குமாரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS