பிரேத பரிசோதனை முடிந்து ராம்குமாரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு


சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததை அடுத்து, ராம்குமாரின் உடல் அவரது தந்தை பரமசிவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இரண்டரை மணி நேரம் நடந்த ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எய்மஸ் மருத்துவர் சுதிர் கே.குப்தா, மருத்துவர் செல்லக்குமார் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ராம்குமார் உடலைப் பிரேத பரிசோதனை செய்தது.
ராம்குமாரின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராம்குமார் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS