வேலூர் அருகே பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கடத்த முயற்சி


வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்து எட்டு நாட்களே ஆன குழந்தையை கடத்த முயற்சி நடந்துள்ளது.

கலவை பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பவருக்கு 8 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு கல்பனா கழிவறைக்கு சென்று திரும்பிய போது குழந்தை காணாமல் போனதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.

மருத்துவமனையின் காவலாளிகள் குழந்தையை தேடியபோது சந்தேகத்திற்கிடமாக வெளியே செல்ல முயன்ற மகேஷ்வரி என்ற பெண் குழந்தையை திருடிச்சென்றது தெரியவந்தது. குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்து, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS