சென்னையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது


சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி சிறையில் மரணமடைந்த ராம்குமார் உடலின் பிரேத பரிசோதனை சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை ராய்பேட்டை அரசு மருத்தவமனையில் தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பிரேத பரிசோதனையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் கே.குப்தா, வினோத் உள்பட 5 பேர் கொண்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். ராம்குமார் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட சுமார் 3 மணி நேரம் வரை இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18-ம் தேதி அங்குள்ள மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம்குமார் இறந்து 13 நாட்களுக்கு பிறகு, அவரின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS